அரசியல் அனுபவம் இல்லாத டொனால்ட் ட்ரம்ப், பல ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட ஹிலரி கிளிண்டனை தோற்கடித்து, வல்லரசின் அதிபராக தேர்வாகியுள்ளார். எப்போதும் பரபரப்பாக எதையாவது பேசி ஊடகத்தின் கவனத்தை ஈர்த்த ட்ரம்ப். இம்முறை அதிபராக தேர்வாகி உலகத்தின் கவனத்தையே ஈர்த்துள்ளார்.
இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென அமெரிக்க மக்கள் ரொனால்ட் ட்ரம்ப் இற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ஹிலாரி மற்றும் ட்ரம்ப் ஆதரவுத் தரப்பினருக்கு இடையிலான மோதலில் ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இதுவரை ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன
ட்ரம்ப் ஜனாதிபதி ஆனதை அடுத்து நேற்றைய தின ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்ததாகவும் ரொய்ட்டர் செய்தித்தளம் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
‘ட்ரம்ப் எனது ஜனாதிபதி அல்ல’, ‘ட்ரம்ப் வேண்டாம்’, அமெரிக்காவில் இனவாதம் வேண்டாம்’ என்ற பதாதைகள் ஆர்ப்பாட்டத்தில் முக்கிய இடம் பிடித்திருந்தன.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்ததாகும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=4QBdGH8fAeU” width=”560″ height=”315″]









