எதிர்க்கருத்து கூறுபவர்களை ப்ளாக்(block) செய்யும் வசதி ட்விட்டரில் இருக்கும் நிலையில், ட்ரம்ப் யாரையும் பிளாக் செய்ய கூடாது என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரசாரமான அரசியல் விமர்சனம், ஊடகங்களை கடுமையாக சாடுவது என தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் தொடர்ந்து ட்ரம்ப் உற்சாகமாக இருப்பவர்.
தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களை பிளாக் செய்வதும் வாடிக்கையான ஒன்றே. இவ்வாறு ட்ரம்ப் பிளாக் செய்யப்பட்ட 7 பேர், வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்ப் தங்களை பிளாக் செய்துள்ளதால், அவரது ட்விட்டர் பதிவை எங்களால் படிக்க முடியவில்லை என அவர்கள் அமெரிக்க பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணையில், ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் அரசியல் ரீதியான கருத்துக்களின் அடிப்படையில் அவர்கள் தடை செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதி, சமூகவலைதளங்களில் பொதுமக்களின் கருத்து அவர்களின் தனிப்பட்ட உரிமை என்றும், அதனை பிரதமரின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யக் கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும், டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களை தடை செய்யக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு, நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.