தக்காளிப் பிரியரா நீங்க..? அப்போ ஆபத்து நெருங்குது..

நம் அன்றாட உணவில் பயன்படுத்தும் ஒருசில காய்கறிகளில் தீங்குகள் தரக்கூடிய காய்கறி வகைகள் உள்ளது. அந்த வகையில் தக்காளியும் ஒன்றாகும்.

தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

  • தக்காளியில் அதிக அளவு அமிலத் தன்மை இருப்பதால், நமது உடலின் உணவுக்குழலைப் பாதித்து, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது.
  • பைத்தோகெமிக்கலான ஐசோபீன்கள் மற்றும் லைகோபீன் தக்காளியில் அதிகமாக காணப்படுகிறது. எனவே இது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் போன்ற தொற்றுகளில் இருந்து எதிர்த்து போராடும் செயல் திறனைக் குறைக்கிறது.
  • தக்காளியில் இருக்கும் ஐசோபீன்கள் ஆண்களின் புரோஸ்டேட் என்னும் சுரப்பியை பாதித்து சிறுநீர் தொடர்பான புற்றுநோய் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
  • தக்காளி மற்றும் அதன் விதைகளில் கால்சியம், ஆக்சலேட் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இது நமது உடலில் உள்ள சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கி அதிக வலியை ஏற்படுத்துகிறது.
  • தக்காளியில் இருக்கும் லைகோபீன் காரணமாக குடல் நோய் கோளாறுகள் மற்றும் எரிச்சல், வலி போன்ற குடல் சம்பந்தமான பிரச்சனைகளை தோற்றுவிக்கிறது.
  • தக்காளி ஒருசிலருக்கு ஒவ்வாமையாக இருந்து அதை சாப்பிடும் போது, அவர்களுக்கு தோல்கள் மீது எரிச்சல், தடித்தல், படைகள் மற்றும் கொப்புளங்கள் போன்ற தோல் சம்பந்தமான பல பிரச்சனைகள் வருகின்றது.
  • தக்காளியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது எனவே இதை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிடுவதால், குமட்டல், வாந்தி, மயக்கம் மற்றும் கடுமையான வயிற்றுப்போக்குகள், கண்கள் மற்றும் உதடுகள் பாதிப்பு, உடல் வீக்கம் போன்ற பல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.