தங்காலை – பலபொத பிரதான நீர் வழங்கல் குழாயினை புதுப்பிக்கும் நடவடிக்கை காரணமாக பிரதேசங்கள் சிலவற்றுக்கு நீர் வெட்டு அமுல்படுத்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை(28) காலை 08.00 மணி முதல் 30ம் திகதி காலை 08.00 மணி முதல் தங்காலை பலபொத, கத்துருபொகுண, சீனிமோதர, உனாகூருவ, கொயம்போக்க, கொஸ்வத்த மற்றும் பள்ளிகுடாவ ஆகிய பிரதேசங்களுக்கே இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.