ஒரு கோடி 40 லட்சத்து 55 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் நீர்கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்த ஓய்வு பெற்ற சுங்க பிரிவு பரிசோதகர் ஒருவர் (65) இன்று(10) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது பயண பொதியில் இருந்து குறித்த தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.