தங்க பிஸ்கட்கள், ஆபரணங்களுடன் 9 பேர் கைது..

ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவந்த 9 பேர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் துபாயில் இருந்து வருகை தந்துள்ளனர் எனவும் குறித்த சந்தேகநபர்கள் மருதானை, நீர்கொழும்பு, சீதுவ, சிலாபம் மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் சுமார் ஒரு ​கோடியே 63 இலட்சத்து 44 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க பிஸ்கட்களை தமது பயணப் பொதிகளில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.