சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா மற்றும் தசுன் ஷானக தற்போது அணியில் உள்ள வளர்ந்து வரும் வீரர்கள் என இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க வார இறுதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கான நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
திசர மற்றும் தசுன் ஆகியோர் அவர்களது அனுபவங்களைக் கொண்டு விளையாட்டு திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வீரர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக தசுன் ஷானகவிற்கு அதிகளவு ஓட்டங்கள் பெற முடியும் என்றும், அவரை 04ம் இடத்தில் துடுப்பெடுத்தாட களமிறக்க யோசனைகள் உள்ளதாகவும் ஹதுருசிங்க தெரிவித்திருந்தார்.
அவ்வாறே தனுஷ்க குணதிலக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்க முடியும் எனவும் அவரது பந்து வீச்சும் அணிக்கு பாரிய சேவை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.