மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விற்பனை தொடர்பில், தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ள தகுதியான நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
அதன்பொருட்டு இதுவரையில் 05 நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.