(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் இன்று மாலை மொஸ்கோ நோக்கி புறப்படவுள்ளது.
குறித்த விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் இன்று இடைநிறுத்தப்பட்டது.
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவையடுத்து நீதிமன்றம் குறித்த உத்தரவை இடைநிறுத்தி உத்தரவிட்டது. இதனையடுத்து, இலங்கை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் ஏரோஃப்ளொட் விமான சேவைக்கு சொந்தமான A330 வகையைச் சார்ந்த விமானம் (SU289) இன்று மொஸ்கோ நோக்கி புறப்படவுள்ளது.