தடுமாறி விழுந்த கோஹ்லி.. தயங்காமல் உதவிய பால்க்னர் (VIDEO)

மெல்போர்னில் நடந்த 2வது டி20 போட்டியில் தடுமாறி கீழே விழுந்த கோஹ்லிக்கு அவுஸ்திரேலிய வீரர் பால்னர் உதவியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை அவுஸ்திரேலியா 4-1 என கைப்பற்றி உள்ளது.

இதில் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் பால்க்னர், இந்திய துணை அணித்தலைவர் விராட் கோஹ்லிய அடிக்கடி சீண்டியபடி இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெற்றது.

இந்நிலையில் டி20 தொடரில் மெல்போர்னில் நடந்த 2வது டி20 போட்டியில் கோஹ்லி ஓட்டங்கள் எடுக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதை பார்த்த பால்க்னர் அவருக்கு உதவி செய்தார். இந்த சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது.

குறித்த வீடியோவினை  பார்வையிட;

[youtube url=”https://www.youtube.com/watch?v=Nwk1Ne5K-PM” width=”560″ height=”315″]