தடைக்கு மத்தியில் ஸ்மித் – வார்னர் ஆகியோருக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி…

பந்தினை சேதப்படுத்திய சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு ஒரு வருடம் போட்டித் தடைக்கு ஆளாகியுள்ள அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் முன்னாள் உப தலைவர் டேவிட் வார்னர் ஆகியோருக்கு உள்ளாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கியுள்ளதாக விளையாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அவுஸ்திரேலியா கிரிக்கெட் நிறுவனத்தினால் அவர்களுக்கு உள்ளாட்டு போட்டிகளைப் போன்றே வெளிநாட்டில் இடம்பெறும் பிராந்திய போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அண்மையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பந்தினை சேதப்படுத்தியமை குறித்த குற்றச்சாட்டில் குறித்த இருவருக்கும் போட்டித் தடை விதிகப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

rishma