தந்தை பெரிய தவறொன்றினை செய்தார்.. – என்றாலும் பிள்ளை என்ற முறையில் தந்தைக்கு சேறு பூச இடமளிக்க மாட்டேன்..

இராஜ் வீரரத்ன இனால் அண்மையில் வெளியிடப்பட்ட விக்டர் ரத்நாயக்க அவர்களை குறியாய் வைத்த புதிய வீடியோவானது விக்டர் ரத்நாயக்கவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையினை கிளப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் இசைக் கலையில் பெரும் பிரபலம் பெற்றவர்களுள் ஒருவர் தான் விக்டர் ரத்நாயக்க, அவரது தனிப்பட்ட வாழ்க்கையினையே இராஜ் அண்மையில் அவரது புதிய வீடியோ பதிவாக வெளியிட்டிருந்தார். இது குறித்து விக்டர் ரத்நாயக்கவின் மகன் ஜயந்த ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில்;

“இராஜ் என்பவர் இசையமைப்பாளர் அல்ல. பிஸ்னஸ் மேன் (வியாபாரி). நான் எனது நாட்டு ஊடகங்களில் காணக் கூடியவை உண்மையிலேயே இசைகள் அல்ல.. இசைத் துறையில் எவ்வித பயிற்சியும் பெறாத வியாபரத்திற்காக இசையமைப்பவர்கள். அவர்களுக்கு இசை என்றால் என்னவென்றே தெரியாது.

அவ்வாறானோர் இராஜ் போன்றோருக்கு துணையும் போகிறார்கள்.. உண்மையிலேயே இராஜ் இற்குத் தேவை ஏதும் அரைநிர்வாண காணொளி ஒன்றினை youtube இல் பதிவிட்டு அமெரிக்காவினால் கிடைக்கப் பெறும் பணத்தினை பெறவே அன்றி வேறில்லை.

அவருக்கு கலாச்சாரம் முக்கியமில்லை.. வீடியோ ஒன்று ஹிட் ஆக வேண்டுமெனின் எதுவென்றாலும் செய்வார்.. youtube இல் Upload செய்ததும், பார்வையிடும் அளவுக்கு ஏற்ப பணம் வழங்கப்படும்.

எமது தந்தைக்கு மட்டுமல்ல இராஜிற்கு தேவைப்படுவோரை அவர் அவரது ஹிட் வீடியோ இற்கு ஏற்ப தயார் படுத்துவார்.

சிலர் கூறுகின்றனர் நாம் தந்தையை ஒழுங்காக கவனிக்கவில்லையாம்.. ஆதலால் வேறொரு அன்பை அவர் தேடினாராம்.. குறித்த குற்றச்சாட்டினை முற்றாக நிராகரிக்கின்றோம். என்ன செய்தாலும் அவர் எனக்கு தந்தை இல்லை என்று ஆகாது. எனது தந்தை தப்பு செய்தாலும், நான் பிள்ளை என்ற முறையில் தந்தைக்கு சேறு பூச இடமளிக்க மாட்டேன். தந்தை பெரிய தவறொன்றினை செய்து கொண்டார். என்றாலும் அது இராஜ் போன்றோருக்கு பணம் சம்பாதிக்க நல்லதொரு தலைப்பாகியது..”

 

(rizmira)