தனக்குப் பயந்தே சஜித் ஹம்பாந்தோட்டை சென்றார் – விமல்

கொழும்பு, கெசெல்வத்தையில் பிறந்த சஜித் பிரேமதாஸ ஹம்பாந்தோட்டையில் போட்டியிடுவது தன் மீது கொண்டுள்ள பயத்தின் காரணமாகவா என்று தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.

பெலியத்த பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ குருணாகலைக்கு தப்பியோடியது தன் மீது காணப்பட்ட பயத்தினால் என சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டமைக்கு சவால் விடுக்கும் வகையிலேயே விமல் வீரவன்ச இக்கருத்தினை வெளியிடுள்ளார்.

மேலும், 2004, 2010 பொது தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் விமல் வீரவன்ச அதிக வாக்குகளை பெற்றுக்கொண்ட ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு செய்ய முடியாத மாற்றத்தை ஒரு போதும் அன்னத்தினால் செய்ய முடியாது, மேலும் அன்னத்தை நம்பி பலர் நம்பி ஏமாற்றமடைந்துள்ளார்கள் என விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(riz)