தனஞ்சய சில்வாவின் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக 6ம் திகதி..

இலங்கை அணியில் கைகோர்த்துள்ள கிரிக்கெட் நட்சத்திரமான தனஞ்சய சில்வாவினது பிறந்த தினமானது செப்டம்பர் மாதம் 6ம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

அந்நாள், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாம் இருபதுக்கு 20 போட்டி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அவரது குறித்த பிறந்த தினமன்று தனஞ்சயவின் தாய் என்றும் நினைவில் இருக்கத்தக்க பரிசொன்றினை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காகத்தான், அன்று ஆஸி அணிக்கு எதிரான போட்டியில் தனஞ்சய சதம் பெற்ற போது சந்திமாலினை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட படம் உள்ளிட்ட போட்டியின் வெவ்வேறு கோணங்களில் பிடித்த புகைப்படங்கள்  நிறையவே பெரியளவில் சட்டமிட்டு  அதற்கென தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தனஞ்சயவின் தாயார் கூறுகிறார்..

“எதிர்வரும் 6ம் திகதி தனஞ்சயவின் பிறந்தநாள். அன்று நான் பரிசாக வழங்கவுள்ள பரிசுகள்தான் அவை. நான் இல்லாத காலங்களில் தனஞ்சயவிற்கு இது பெறுமதியாக இருக்கும்” என தனஞ்சயவின் தாயாரான ஷ்ரியலாத புன்முகத்துடன் தெரிவிக்கிறார்.

 

(rizmira)