இரத்மலானை, ஞானேந்திர பிரதேசத்தில் நேற்று(24) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை உயிரிழந்துள்ளார்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூன்று பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினரான கே, ரஞ்சன் டி சில்வா உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தகவல் தெரியவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை தந்தையின் உயிரிழப்பு காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற உள்ள கிரிக்கட் தொடரில் தனஞ்சய டி சில்வா பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.