தனது காதலியை 2வது திருமணம் செய்து கொண்ட பிரபல இசையமைப்பாளர்…

கமல்ஹாசன் நடித்த தசாவதாரம், பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் ஆகிய படங்களுக்கு இசை அமைத்தவர் பாலிவுட்டைச் சேர்ந்த ஹிமேஷ் ரேஷ்மியா.

இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட அவர், ஏற்கனவே கோமல் என்பவரை காதலித்து திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்த ஹிமேஷ், கடந்த சனிக்கிழமை இரவு திடீரென்று தனது காதலி சோனியா கபூர் என்ற நடிகையை மும்பையில் ரகசிய திருமணம் செய்துகொண்டார்.