இந்திய இராணுவத்தில் இருந்த தன் தந்தையை கார்கில் போரில் இழந்த பெண் ஒருவர், தனது சோகத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்து கொண்டது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
அந்த பெண் கூறியதாவது,
“….பாகிஸ்தான் என் தந்தையை கொல்லவில்லை, அங்கு நடைபெற்ற போரால் தான் எனது தந்தை உயிரிழந்தார். இந்த பிரச்சினையை பேசி தீர்த்திருந்தால் என்னை போன்ற பலர் தந்தையோடு இருந்திருப்பார்கள்…” என உருக்கமாக அந்த பெண் அட்டையில் எழுதிய வார்த்தையில் கூறியிருந்தார்.
அதை பார்த்த கிரிக்கெட் வீரர் சேவாக், “நான் இரண்டு முறை முச்சதம் அடிக்கவில்லை, என் பேட் தான் அடித்தது” என கலாய்த்திருந்தார்.
இதற்கு பாடகி சின்மயி மறைமுகமாக ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த காணொளி…
[youtube url=”https://www.youtube.com/watch?v=ilkU25fhi6w” width=”560″ height=”315″]
