தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக இராணுவ வீரர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு பாதுகாப்பு பிரிவு தலைமையகத்தில் இராணுவ பிரிவினரை சந்தித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவது இராணுவ வீரர்களின் கடமை எனவும் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியான முறையில் நிறைவேற்றாமல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் இராணுவ தளபதி மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#reeshma