2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இலங்கையின் அபிவிருத்தி திட்டத்திற்காக தனியார் துறையை ஊக்குவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு விஐயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, உலக வங்கியின் சர்வதேச நிதி ஒத்துழைப்பு நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மென்கட்சு அல்மேயேஹூ Mr.Mengistu Alemayehu உடன் நேற்று(11) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.