தனியார் பஸ் ஊழியர்கள் இன்று(15) முதல் வழமைபோன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நிதியமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையடுத்து போராட்டத்தில் ஈடுபடும் தமது தீர்மானம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பல்வேறு சங்கங்களின் பங்குபற்றுதலுடன், நிதி அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை ஒன்று நேற்று(14) இரவு நடைபெற்றிருந்தது.
இதன்போது குறித்த விடயம் தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், அமைச்சரவையிலும் இது தொடர்பில் ஆலோசிப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உறுதியளித்துள்ளார்.
மேலும் 2500 ரூபாய் என்ற அபராத அதிகரிப்பு தொடர்பில் ஊடகங்களில் பிழையாக செய்தி பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
இதனை அடுத்து இந்த போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.