தனியார் பிரிவினரது சம்பள உயர்வு தொடர்பில் சட்டவரைவு…

(FASTNEWS| COLOMBO)- தனியார் பிரிவு ஊழியர்களுக்கு ஆகக் குறைந்த சம்பளத்தினை உயர்த்துவது தொடர்பிலான சட்டவரைவினை முன்வைக்க எதிர்பார்க்கப்படுவதாக தொழில்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்திருந்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கும் குறித்த சம்பள திருத்தம் இடம்பெறும் என அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இது தொடர்பிலான கலந்துரையாடலில் இது தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.