ஜனவரி தொடக்கம் தனியார் பேரூந்துகளில் வர்த்தகம் செய்வதும், பிச்சை எடுப்பதும் தடை செய்யப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் இந்தத் தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, அவ்வாறு தனியார் பஸ்வண்டிகளின் உள்ளே வர்த்தகம் செய்வோர் மற்றும் பிச்சை எடுப்போரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறான வர்த்தகர்கள் மற்றும் யாசகர்கள் காரணமாக தாம் பெரும் அவதிக்குள்ளாவதாக ஏராளமான பயணிகள் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைக்கு ரயில் வண்டிகளில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ள போதிலும் ரயில் நிலையங்களில் யாசகர்களின் தொல்லை தொடர்ந்து கொண்டிருப்பதாக பயணிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.