தனியார் பேரூந்து துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு தற்போதைய அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாதவிடத்து, மாற்று வழிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் அரசுக்கு எச்சரித்துள்ளார்.