தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்….

புதிய அபராத தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பேரூந்து ஊழியர்கள் நேற்று(15) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேல்மாகாண தனியார் பேருந்து சாரதிகள் சங்கம், ஸ்ரீலங்கா தனியார் பயணிகள் போக்குவரத்து சேவை சங்கம், துறைமுக தனியார் கொள்கலன் செலுத்துனர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவளித்துள்ளன.

எவ்வாறாயினும், இந்த பணிப்புறக்கணிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பேரூந்து உரிமையாளர்களின் சங்கங்கள் தெரிவித்துள்ளன.