தனியார் பேரூந்து சாரதி விபத்தில் பலி..

நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று, எதிர் திசையில் பயணித்துள்ள பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதில், குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது தனியார் பேரூந்து சாரதி காயமடைந்துள்ள நிலையில் ,றாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.

 

(rizmira)