Update – தனியார் பேரூந்து விபத்தில் இதுவரை ஐவர் பலி..

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்து ஒன்று  புத்தளம் – மதுரங்குளி பகுதியில் த முச்சக்கர வண்டி ஒன்றுடன் விபத்துக்குள்ளாகியதில் இதுவரை ஐந்து பேர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் 30 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிக வேகத்துடன் பயணித்த காரணத்தாலேயே, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

 

E – (rizmira)