அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்கள் பெற்றுள்ள வர்த்தக வங்கிக் கடன் மற்றும் தனியார் வங்கிக் கடன்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமரின் தலைமையில் நேற்று(29) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்திருந்தார்.
வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டோரின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அவர்களது பின்னடைவு குறித்து மாவட்ட செயலாளர்களிடமிருந்து அறிக்கை ஒன்றினை பெறவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டுள்ளோருக்கு வழங்க வேண்டிய காப்புறுதி இழப்பீடுகளை அவசரமாக வழங்குமாறும் அது குறித்து தனியார் மற்றும் அரச காப்புறுதி நிறுவனங்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.