தனியார் மின்சார நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்…

(FASTNEWS|COLOMBO) – நாடளாவிய ரீதியாக மின்சாரத் தடையை நிவர்த்தி செய்வதற்காக தனியார் மின்சார நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

அதன்படி, 300MW (மெகாவேட்ஸ்) மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக மின்சார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.