தனியார் வைத்திய நிறுவனத்தில் மனித உடற்பாகங்களை வைத்திருப்பதன் சட்டத்தன்மையை அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று(04) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.