கொழும்பு நகரில் காணப்படும் வாகன நெரிசலை குறைப்பதற்கு பேரூந்துகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தனி ஒழுங்கை முறைமை எதிர்வரும் காலங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 12 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை ராஜகிரிய மற்றும் ஆயுர்வேத சந்தி வரை குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையினை தொடர்ந்து நேற்று(22) கைவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.