தனுஷின் புதிய படத்தின் பெயர் வெளியாகியது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனுஷ் நடிப்பில் எதிர்வரும் 29ம் திகதி வெளியாகவுள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

அதே வேளையில் அவர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் ஷூட்டிங் இடைவெளியில்லாமல் லண்டலில் 64 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டது. பலருக்கும் ஆச்சரியமளித்துள்ளது.

மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கேம்ஸ் ஆஃப் த்ரோன்ஸ் (Games of the Thrones) ஹாலிவுட் பட புகழ் ஜேம்ஸ் காஸ்மோ இப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் படத்திற்கு டைட்டில் ‘சுருளி’ என வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.