தனுஷுடன் இணையும் Dimple

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் நடிக்கவுள்ள பாலிவுட் படத்தில் இன்னொரு பிரபல ஹீரோயினும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு தனுஷ், சோனம் கபூரை வைத்து பாலிவுட்டில் ராஞ்சனா படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் எல். ராய் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.

கொரோனா இந்தியாவில் பரவுவதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் இந்த படத்திற்கான ஷூட்டிங் வாரணாசியில் போடப்பட்டது.

இந்நிலையில், தற்போது அட்ரங்கி ரே படத்தில் இன்னொரு நாயகியாக டிம்பிள் ஹயாட்டி இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இவர் கல்ஃப் படத்தில் நடித்து பிரபலமானவர். மற்றும் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியான ‘தேவி 2’ படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் நிலைமை சீர் ஆன உடனே படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஞ்சனா படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷ் – ஆனந்த் எல் ராய் கூட்டணி படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைக்க உள்ளார். பாலிவுட்டில் தனக்கான வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக ஏ.ஆர். ரஹ்மான் அண்மையில் கூறியிருந்த நிலையில், சுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா படத்தைத் தொடர்ந்து அட்ரங்கி ரே படத்திற்கு ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.