தனுஷ்கவை தேசிய அணியில் இருந்து நீக்கியமை சூழ்ச்சியே.. தனிப்பட்ட மேலாளர் ஒருவரின் சூழ்ச்சி வெளிச்சத்திற்கு…

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக நோர்வே பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் தனுஷ்கவை இலங்கை தேசிய அணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் வெளிநாட்டு மேலாளர் ஒருவர் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு குறித்த வெளிநாட்டு மேலாளரது நிர்வாகத்தை விட்டும் வெளியேறிய தனுஷ்க குணதிலக, அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது ஆகிய போட்டிகளில் இருந்தும் விலகி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

விசேடமாக நோர்வே பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் குற்றவாளியான தனுஷ்க குணதிலகவின் நண்பர் சந்தீப் சுப்பையா, அன்றைய நாள் இலங்கை அணி வீரர்கள் 07 பேருடன் உணவருந்துவது ஹோட்டலில் உள்ள cctv காணொளிப் பதிவில் காணக்கூடியதாக உள்ளதோடு, குறித்த வீரர்களும் நோர்வே பெண்ணுடன் கதைக்கும் பதிவுகளும் cctv இல் பதிவாகியுள்ளதாகவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சந்தேகநபரான சந்தீப் சுப்பையா, இலங்கை அணியின் அநேக வீரர்களது மேலாளரான குறித்த வெளிநாட்டு மேலாளரது இந்நாட்டினை பிரதிநிதித்துவம் செய்து பணியாற்றும் நபரும், இலங்கை அணியின் வீரர்கள் பலரும் அவரது நண்பருமாவார். முகநூல் கணக்கிலும் இலங்கை வீரர்களுடன் அவரது புகைப்படங்களும் பதிவேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நோர்வே நாட்டு பெண்ணை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாக கூறப்படும் சம்பவம் உண்மையற்றது என்றும் அவர்கள் இலங்கை அணியினர் இருந்த ஹோட்டலிலேயே சில நாட்களாக தங்கியிருந்ததாக தெரிவிக்கபடுகின்றது.

இலங்கை அணி வீரர்கள் அன்றைய தினம் உணவருந்தும் போது குறித்த இரு பெண்களும் வீரர்களுடன் கதைத்துக் கொண்டிருக்க குறித்த சந்தர்ப்பத்தில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் ஒருவரின் அழைப்பின் பேரில் சந்தீப் சுப்பையாவும் அங்கு வந்துள்ளார்.

விசாரணைகளின் படி, குறித்த சந்தர்ப்பத்தில் தனுஷ்க குணதிலக தன்னை குறித்த பெண்களுக்கு அறிமுகம் செய்து கதைக்கும் போது நகைச்சுவைகள் பரிமாறிக் கொண்டுள்ளனர். விசேடமாக ஆங்கிலத்தில் கதைக்கும் போது திக்கு முக்காடி பேசும் பேசுவதைப் பார்த்து அனைத்து வீரர்களும் சிரித்துள்ளனர்.

போட்டியில் இரு அரைச் சதங்களை விளாசிய தனுஷ்க குணதிலகவிடம் வீரர்கள் பார்ட்டி தருமாறு கோர குறித்த மேசையில் இருந்த நோர்வே பெண்கள் இருவர் உள்ளிட்ட அனைவரதும் உணவுகளுக்கான கட்டணங்களை தனுஷ்கவே செலுத்தியுள்ளார்.

பொதுவாக வீரர்கள் இரவு 10 மணிக்கு அறைகளுக்கு செல்ல வேண்டிய வீரர்கள் அன்றைய நாளுக்கான cctv பதிவுகளின் படி இரவு 11.10 இற்கே சென்றுள்ளனர்.

 

R.Rishma