இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த சர்வதேச 6 ஒரு நாள் போட்டிகளுக்கான தடை 3 போட்டிகளுக்கான தடையாக குறைக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்தவும் அவரின் வருடாந்த ஒப்பந்த கட்டணத்தில் 20% ஐ அபராதமாக விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
போட்டி ஒப்பந்தத்தை மீறியமை தொடர்பில் தனுஷ்க குணதிலக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த இந்த தடைக்கு எதிராக அவர் இலங்கை கிரிக்கெட்டில் மேன்முறையீடு செய்திருந்தார்.
அவர் தனது தவறை ஏற்றுக் கொண்டமையால், அவர் முன்வைத்த மேன்முறையீட்டுக்கு அமைய இவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னர் அவருக்கு சர்வதேச 6 ஒரு நாள் போட்டிகள் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், வருடாந்த ஒப்பந்த கட்டணத்தில் 20% அபராதம் விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)