பயிற்சிப் போட்டிகளுக்கு இடையே உபாதைக்கு உள்ளாகியமை காரணமாக இலங்கை கிரிகெட் வீரர் தனுஷ்க குணதிலக ஆசியக் கிண்ண போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
அதன்படி, தனுஷ்க இன்று(14) காலை மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாகவும், அவருக்கு மாற்றீடாக ஷெஹான் ஜெயசூரிய குழாமில் இணைக்கப்பட உள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷ்க நேற்றுமுன்தினம்(120 பயிற்சிப் போட்டியின் போது முதுகெலும்பில் உபாதை ஏற்பட்டதாகவும், மீளவும் அவர் குணமடைய இன்னும் சில வாரங்கள் செல்லும் என வைத்திய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமையினால் மீளவும் தாயகம் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.