தன்னை “சேர்” (sir) என்றழைக்குமாறு, மஹரகம நகர சபையின் தலைவர் டிராஜ் லக்ருவன் ஜயரத்னவினால் (Tiraj lakruwan jayarathna), அறிவித்தல் பலகையொன்று வைக்கப்பட்ட சம்பவம், மஹரகம நகரசபையில் இடம்பெற்றுள்ளது.
அந்த அறிவித்தல் பலகையில்,
நகரத்தின் முதலாவதுப் பிரஜை என்பதாலும் இந்த நிறுவனத்தில் நிறைவேற்றுப் பதவியை வகிப்பதாலும், சகல அதிகாரிகளும் பணியாளர்களும் மற்றும் சகல மக்களும், தன்னை “சேர்” என்று அழைக்கவேண்டும்.
இப்படிக்கு,
தலைவர், நகர சபை, மஹரகம நகர சபை.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.