தன்னை விட 19 வயது குறைந்தவரை மணக்கிறார் உலக அழகி பட்டம் வென்ற பிரபல நடிகை

(FASTGOSSIP|COLOMBO) – உலக அழகி பட்டம் வென்றவரும், பிரபல ஹிந்தி நடிகையுமான சுஷ்மிதா சென், தன்னை விட 19 வயது குறைந்தவரை நவம்பர் மாதம் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிப்பு தவிர சமூக சேவைகளிலும் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். இரண்டு பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

பிரபல விளம்பர மாடல் ரோமன் ஷாலை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுஷ்மிதாவுக்கு 43 வயது. ரோமனுக்கு 24 வயது. ரோமனும் சுஷ்மிதாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் இதற்கு சுஷ்மிதாவின் மகள்கள் இருவரும் சம்மதம் கூறிவிட்டதாகவும் தெரிகிறது.

Image result for sushmita sen and rohman shawl