இன்று(10) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
விடயத்திற்குரிய அமைச்சருடன் நேற்று(09) இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்ததாக தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார, தெரிவித்துள்ளார்.