தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தயார் நிலையில்..

பிரதான தபால் நிலைய கட்டிடங்கள் சில சுற்றுலா விடுதிகளுக்காக வழங்க உள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலை நிறுத்தம் ஒன்றினை முன்னெடுக்க ஒன்றிணைந்த தபால் சேவை சங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார கருத்துத் தெரிவிக்கையில்; நுவரெலியா, கண்டி, காலி கோட்டை மற்றும் கொழும்பு ஆகிய பிரதான தபால் நிலைய கட்டடங்கள் விடுதிகளுக்காக வழங்க தீர்மானங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்கு எதிர்ப்பினைத் தெரிவித்தே குறித்த பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

(rizmira)