தபால் தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பில்..

தபால் தொழிற்சங்கங்கள் இன்று(26) முதல் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.

மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்து குறித்த இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக முன்னணியின் ஏற்பாட்டாளர் எச்.கே. காரியவசம் தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவதற்கு இதுவரையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததனால் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

(rizmira)