தபால் ஊழியர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று(26) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தபால் ஊழியர்கள் மேற்கொண்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக குவிந்துள்ள கடிதங்களைப் பகிரும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகம் மற்றும் தபால் நிலையங்களில் 15 இலட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் குவிந்துள்ளதாக தபால் தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த ஏற்பாட்டாளர் ஷிந்தக பண்டார தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக வௌிநாட்டு தபால் சேவையூடாக கொண்டுவரப்பட்ட 1,000க்கும் அதிகமான பொதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.