தபால் மூலமான வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை..

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை(22) வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை உரிய தினத்தன்றோ, அதற்கு முன்னரோ தேர்தல் அலுவலகத்திற்குக் கிடைத்திருப்பது அவசியம் எனவும் தேர்தல் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.