எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் இதுவரை வாக்களிக்காதவர்களுக்கு, மேலும் இரண்டு நாட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை(01) மற்றும் வெள்ளிக்கிழமைகளில்(02) தபால் மூல வாக்குகளை பதிவுசெய்ய முடியுமென தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 22, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கான காலம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.