எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு எதிர்வரும் 25 மற்றும் 26 ஆகிய தினங்களுக்கு மேலதிகமாக இன்னும் 02 நாட்களை ஒதுக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, தபால் மூலம் வாக்களிப்போர் பெப்ரவரி 01 மற்றும் 02 ஆகிய தினங்களில் தமக்கு உரித்தான மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும் என பதில் தேர்தல் பொறுப்பாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அனைத்து தபால் மூல வாக்கு அட்டைகளும் எதிர்வரும் 18ம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்வு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.
உள்ளூராட்சி சபை தேர்தலில் தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதியுடன் நிறைவுக்கு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#reeshma