தபால் மூல வாக்களிப்பு நிறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ளது.

எதிர்வரும் மாதம் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (27) முற்பகல் 09 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இதில் 1192 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நாடளாவிய ரீதியாக அமைந்துள்ள 269 தேர்தல் நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வரும் நிலையில், இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு அடுத்த மாதம் 4 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் உண்டு என தேர்தல் அணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.