தபால் வாக்குச்சீட்டு விநியோகிக்கும் பணிகள் பிற்போடல்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச்சீட்டு விநியோகிக்கும் பணிகள் பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வடமாகாணத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் தபால் வாக்குச் சீட்டு விநியோகம் நாளை(12) இடம்பெறும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.