முல்லைத்தீவு சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போதே, கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.