பாலிவுட் படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்த ஆர்ஷிகான் என்பவர் சமீபத்தில் புனேயில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரை வான்வாடியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை காப்பகத்தில் உள்ள பெண்காப்பாளர்களுடன் சண்டை போட்டுவிட்டு, மொடல் அழகி ஆர்ஷிகான் தப்பி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் மொடல் அழகியை தேடி வருகின்றனர்..