புத்தளம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கடும்மழை காரணமாக தப்போவ நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தப்போவ நீர்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தப்போவ நீர்தேக்கத்தை அண்மித்து வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.