தப்போவ பகுதியிலிருந்து வில்பத்து வரை விசேட சுற்றுலா வலயம் – 15,000 தொழில் வாய்ப்புக்கள்…

தப்போவ பகுதியிலிருந்து வில்பத்து வரை விசேட சுற்றுலா வலயம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம், 15,000 தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என பாலித தெரிவித்துள்ளார்.

தப்போவ பொருளாதார வலயத்தின் மேம்பாட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட கவனம் செலுத்தி வருகின்றார் என்றும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.